வங்கதேசத்துடனான டி20-ஐ இந்தியாவில் நடத்தும் ஆப்கானிஸ்தான்

இந்தியாவில் வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியை நடத்துகிறது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
 | 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு, அயர்லாந்துடன் சேர்த்து டெஸ்ட் அந்தஸ்த்தை வழங்கியது ஐசிசி. இதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா நடத்துகிறது. ஜூன் 14ம் தேதி இரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் தொடங்குகிறது. 

இதற்கு முன்னதாக, ஜூன் 3,5, மற்றும் 7ம் தேதிகளில் வங்கதேச அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளை ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவில் நடத்துகிறது. டெஹ்ராடூனில், ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. 

2014ம் ஆண்டு உலக டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான்- வங்கதேச அணிகள் ஒரே ஒரு முறை மோதியிருந்தன. அதன் பிறகு, தற்போது தான் டி20 போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP