ஆப்கான் டெஸ்ட்: கேப்டனாக ரஹானே; ரோஹித் அவுட்!

ஆப்கானிஸ்தானுடன் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியின் கேப்டனாக அஜின்கியா ரஹானே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 | 

நேற்று நடந்த பிசிசிஐ கூட்டத்தில், 6 தொடர்களுக்கான இந்திய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானுடன் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் நடைபெறும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் ஆகியவைக்கான அணிகள் உள்ளிட்டவை இதில் தேர்வு செய்யப்பட்டன. 

டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக விளையாடும் ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்திய அணியின் கேப்டனாக ரஹானே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், மற்ற டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணிகளில் அவர் இடம்பெறவில்லை.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துடன் நடைபெறும் டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு கோலி தலைமை தாங்குவார். சர்ரி கவுண்டி கிரிக்கெட் அணியில் விளையாட செல்வதால், ஆப்கானுக்கு எதிரான போட்டியில் கோலி பங்கேற்கவில்லை.

ஐபிஎல்-ல் கலக்கி வரும் லோகேஷ் ராகுல் மற்றும் கருண் நாயர், டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ரோஹித் சர்மா விடுவிக்கப்பட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP