சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஏபி டி வில்லியர்ஸ்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார்.
 | 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஏபி டி வில்லியர்ஸ்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஏபி டி வில்லியர்ஸ்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். 

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வெற்றி கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ், தனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு முழுக்குப்போட உள்ளார். 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஏபி டி, இது தான் ஓய்வுக்கான சரியான நேரம் என்று கூறியுள்ளார். 

"நான் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளேன். ஓய்வுக்கான சரியான நேரம் இது. இதனால் மற்ற வீரர்களுக்கான இடம் கிடைக்கும். உண்மையை சொல்லப்போனால். நான் சோர்வாகிவிட்டேன். இது ஒரு கடினமான முடிவு தான். என்றாலும், நீண்ட காலமாக சிந்தித்து முடிவு எடுத்தது தான். 

இத்தனை ஆண்டுகள் எனக்கு ஆதரவு கொடுத்த கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா, அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். இவர்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை. சர்வதேச போட்டியில் இனி நான் இடம் பெற வாய்ப்பில்லை. உள்ளூர் போட்டிகளில் களமிறங்குவேன். பாப் டு பிளேஸிஸுக்கும், அணியினருக்கும் என்னுடைய முழு ஆதரவு உள்ளது" என்றார். 

11-வது ஐ.பி.எல் போட்டியில் லீக் சுற்றுடன் வெளியேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்காக விளையாடி வந்த ஏபி டி வில்லியர்ஸின், கடைசி சர்வதேச போட்டியாக இது அமைந்துள்ளது ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP