ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வு: 'சகோதரர்'-காக கோலியின் உருக்கமான ட்வீட்

ஓய்வு பெற்ற ஏபி டி வில்லியர்ஸ்காக விராட் கோலி உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.
 | 

ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வு: 'சகோதரர்'-காக கோலியின் உருக்கமான ட்வீட்

ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வு: 'சகோதரர்'-காக கோலியின் உருக்கமான ட்வீட்

ஓய்வு பெற்ற ஏபி டி வில்லியர்ஸ்காக விராட் கோலி உருக்கமாக ட்வீட் செய்துள்ளார். 

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை கிளப்பியது. 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அன்போடு அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸுக்கு இந்தியாவிலும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஐ.பி.எல்-ல் அவரை எதிர்பார்க்காத பட்டாளம் இல்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் ஓய்வு பெற்றது, கேப்டன் விராட் கோலியையும் வருத்தத்திற்கு ஆளாக்கியது. 

கோலி தனது வருத்தத்தை ட்வீட் செய்து வெளிப்படுத்தியுள்ளார். அவரது டீவீட்டில், "நீங்கள் இனி செய்யப்போகும் அனைத்து காரியங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் சகோதரரே. நீங்கள் பேட்டிங் செய்து வரும் காலங்களில் இருந்து பார்த்து வருகிறேன். கிரிக்கெட்டில் எனது பேட்டிங் முறையை தாங்கள் மாற்றினீர்கள். கிரிக்கெட்டில் இருந்து எதிர்கால வாழ்க்கையை நோக்கி பயணிக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் ஏபி டி வில்லியர்ஸ், 114 டெஸ்ட் போட்டிகளில் 22 சதங்களுடன் 8,765 ரன்கள் விளாசியுள்ளார்.  சராசரி 50.66. 228 ஒருநாள் போட்டிகளில் 9,577 (25 சதம்) ரன் மற்றும் 78 டி20-களில் (10 அரைசதங்கள்) 1,672 ரன்களும் அடித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP