ஆசிய போட்டியில் 69 பதக்கங்கள்: முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா

2018ம் ஆண்டுக்ககான ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 69 பதகங்களை வென்று கடந்த சாதனைகளை முறியடித்துள்ளது. இதற்கு முன்னர் 2010ல் சீனாவில் நடைபெற்ற போட்டியில் 64 பதக்கங்கள் வென்றதே சாதனையாக இருந்தது.
 | 

ஆசிய போட்டியில் 69 பதக்கங்கள்: முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா

2018ம் ஆண்டுக்ககான ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 69 பதகங்களை வென்று கடந்த சாதனைகளை முறியடித்துள்ளது.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தா மற்றும் பால்ம்பேங்கில் நடைபெற்ற 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதில் இந்தியா சார்பில் சுமார் 500 வீரர், வீராங்கனைகள் 36 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.

பெரும்பாலான போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை நடைபெறும் டிரையத்லான் போட்டிகளுக்குப் பிறகு நிறைவு விழா நடைபெறுகிறது. இந்தியா இதுவரை 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலத்துடன் மொத்தம் 69 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

இது கடந்த ஆண்டுகளில் பெற்ற அதிக பதக்கங்களாகும். 2010ல் சீனாவில் நடைபெற்ற போட்டியில் 64 பதக்கங்கள் வென்றதே சாதனையாக இருந்தது. நடப்புத் தொடரில் சீனா 132 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலத்துடன் மொத்தம் 289 பதக்கங்களை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP