2-வது ஒருநாள்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

இந்திய பெண்கள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
 | 

2-வது ஒருநாள்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

2-வது ஒருநாள்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

இந்திய பெண்கள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 37.2 ஓவரில் 113 ரன்களில் சுருண்டது. இதை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 29 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தொடரை 1-1 சமன் செய்துள்ளது. 

இந்தியா- இங்கிலாந்து மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 12ம் தேதி நாக்பூரில் நடக்கிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP