100-பந்து கிரிக்கெட்: விராட் கோலி, எம்.எஸ். தோனி பங்கேற்பு

இங்கிலாந்து அறிமுகப்படுத்த உள்ள 100-பந்து கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் தோனி, கோலி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
 | 

2020ம் ஆண்டு முதல் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது. டி20 போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், புதிய 8 அணிகள் கொண்ட உள்ளூர் தொடரை இங்கிலாந்து அறிமுகம் செய்கிறது.  

இந்த 100-பந்து போட்டியில் இந்தியா சார்பில் கேப்டன் விராட் கோலி, எம்.எஸ். தோனி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களை களமிறக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இவர்கள் கலந்து கொண்டால் துவக்க போட்டிக்கு புதிய உத்வேகம் கிடைக்கும் என்பது அவர்களது யோசனையாக உள்ளது. 

ஒரு இன்னிங்சில் 100 பந்துகள் வீசப்பட இருக்கிறது. இதில் முதல் 15 ஓவர்களில், ஒவ்வொரு ஓவருக்கும் 6 பந்துகள் வீசப்படும். கடைசி ஓவரில் 10 பந்துகள் வீசப்பட்ட உள்ளது. இதனால் போட்டி இரண்டரை மணி நேரத்தில் முடிவுக்கு வரும். இதேபோல் பெண்கள் பங்கேற்கும் போட்டியும் வருங்காலத்தில் நடக்க இருக்கிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP