சீனியர் காமன்வெல்த் வாள் வீச்சு: சென்னை வீராங்கனை தங்கம்!

சென்னையை சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனையா பவானி தேவி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சீனியர் காமன்வெல்த் வாள் வீச்சு போட்டிகளில், தங்கப்பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
 | 

சீனியர் காமன்வெல்த் வாள் வீச்சு: சென்னை வீராங்கனை தங்கம்!

சென்னையை சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சீனியர் காமன்வெல்த் வாள் வீச்சு போட்டிகளில், தங்கப்பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில், சீனியர் காமன்வெல்த் வாள்வீச்சு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று துவங்கிய இந்த தொடர், வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. வாள்வீச்சில் பல சாதனைகளை புரிந்து வந்த இந்திய வீராங்கனை பவானி தேவி, இந்த தொடரில் விளையாடினார். அரையிறுதியில் ஸ்காட்லாந்தை சேர்ந்த கேட்ரியோனா தாம்சனை வீழ்த்தியிருந்தார் தேவி. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், எமிலி ரூவாக்சுடன் மோதினார். இதில், 15-12 புள்ளிகள் என்ற வித்தியாசத்தில் பவானி தேவி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை இதன்மூலம் தேவி படைத்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP