IPL 2019: முதல் ஆட்டத்தின் வசூல் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் நாள் ஆட்டத்தின் டிக்கெட் வசூல் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் என்.சீனிவாசன் அறிவித்தார்.
 | 

IPL 2019:  முதல் ஆட்டத்தின் வசூல் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும்

ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வசூல் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் நாளை மறுநாள் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் துவங்க இருக்கிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேல்ஞ்ர்ஸ் அணிகள் மோதுகின்றனர். 

இந்த ஆட்டத்தின் டிக்கெட் விற்பனையில் வசூலாகும் தொகை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் என்.சீனிவாசன் பேசும் போது இதனை அறிவித்தார். 

அவர், "வரும் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் போட்டியில் வசூலாகும் மொத்த டிக்கெட் தொகையும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்கள் குடும்பத்துக்கு வழங்கப்பட உள்ளது. இதனை சென்னை அணியின் கேப்டன் தோனி வழங்குவார்’’ என்றார்.

முன்னதாக தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்காக,  ஐபிஎல் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டு அதற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 20 கோடி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP