நான் ஓரினச் சேர்க்கையாளர்.. பார்ட்னரின் பெயரை வெளியிட மறுத்த வீராங்கனை டுட்டீ சந்த் 

தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்றும் தனது தோழியுடன் நிரந்தரமாக வாழப்போவதாகவும் தடகள வீராங்கனை டுட்டீ சந்த் தெரிவித்துள்ளார்.
 | 

அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கங்களை வென்றார். ஒடிஷா மாநிலத்தைச்  சேர்ந்த இவர், தான் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்ற தகவலை தற்போது வெளியிட்டு இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘

தனது கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்ணுடன் ஐந்து ஆண்டுகளாக தொடர்பில் உள்ளதாகவும், அவள் புவனேசுவரத்தில் உள்ள கல்லூரியின் படித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள டுட்டீ சந்த், அவர் தான் தனது உயிர். எதிர்காலத்தில் அவருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், இதற்கு தனது சகோதரியிடம் இருந்து எதிர்ப்பு வந்தாலும், இறுதியாக அவருடன் இருக்கவே விரும்புவதாகவும், தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே தனது லட்சியம்எனவும், டுட்டீ சந்த் கூறியுள்ளார்.  இருப்பினும், தனது பார்ட்னரின் பெயரை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP