உலக சாம்பியன்ஷிப் செஸ்ஸில் தங்கம்: வாழ்த்து மழையில் பிரக்ஞானந்தா

இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்திய சென்னை வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பலர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
 | 

மும்பையில் நடைபெற்ற  உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில், 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பிரக்ஞானந்தா, ஜெர்மனி வீரர் பக்கெல்லை எதிர்கொண்டு விளையாடிய போது, 11-ஆவது, கடைசி சுற்று ஆட்டம் சமனில் முடிந்தது. இந்த நேரத்தில், அர்மேனிய வீரர் சர்க்சியானை எதிர்த்து விளையாடிய அர்ஜூன் கல்யான் ஆட்டத்தை சமன் செய்தார். இதனால் பிரக்ஞானந்தாவுக்கு 9 புள்ளிகள் கிடைத்து, சாம்பியன் பட்டம் வென்றார்.

இதையடுத்து, பிரக்ஞானந்தாவுக்கு செஸ் வீரர் விஸ்வநாதன், ஆனந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட  பலர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டியை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்குன் நன்றியை தெரிவிப்பதாகவும் பிரக்ஞானந்தா கூறியுள்ளார். மேலும், விஸ்வநாதன் ஆனந்த் தன்னை பாராட்டி இருப்பது அடுத்துவரும் தொடர்களில் சிறப்பாக செயல்பட தன்னை ஊக்குவிக்கும் என்றும் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP