எப்படி இருங்கீங்க... நல்லா இருக்கேன்...:தமிழில் பேசிக்கொண்ட தோனி-ஸிவா

தனது மகள் ஸிவா, தமிழில் எப்படி இருக்கீங்க என்று கேட்கும் வீடியோவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 | 

எப்படி இருங்கீங்க... நல்லா இருக்கேன்...:தமிழில் பேசிக்கொண்ட தோனி-ஸிவா

தோனியின் மகள் சிரித்தால் கூட அது இணையத்தில் வைரலாகி விடும். இந்நிலையில் அவர் நம்ம மொழியில் பேசினால் ரசிகர்கள் எப்படியெல்லாம் கொண்டாடுவார்கள்?

ஆம்.. தோனியும், ஸிவாவும் தமிழில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் போது தோனி கிடைக்கும் நேரத்தில் ஸிவாவோடு இருக்கிறார். 

இந்நிலையில் அவர் ஸிவாவோடு விளையாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதில் ஸிவா, தோனியிடம் தமிழில் பேசி உள்ளார். தனது தந்தையை பார்த்து 'எப்படி இருக்கீங்க' என்று ஸிவா கேட்கிறார். அதற்கு தோனி 'நல்லா இருக்கேன்' என்கிறார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Greetings in two language

A post shared by M S Dhoni (@mahi7781) on

 

இதே போல ஸிவாவும் தோனியும் போஜ்பூரியிலும் பேசிக் கொண்டனர். இந்த வீடியோவை தமிழக ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ziva’s bugs bunny @zivasinghdhoni006

A post shared by M S Dhoni (@mahi7781) on

 

இதே போல தோனிக்கு அவரது மகள் கேரட் ஊட்டும் வீடியோவும் இணையத்தை கலக்கி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP