டெல்லி காற்று மாசுபாடு: டி.20 போட்டிக்கு சிக்கல்?

டெல்லியில் நிலவிவரும் காற்று மாசுபாடு காரணமாக இந்தியா-வங்கதேசம் இடையே நடைபெறவுள்ள முதல் டி.20 போட்டிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 | 

டெல்லி காற்று மாசுபாடு: டி.20 போட்டிக்கு சிக்கல்?

டெல்லியில் நிலவிவரும் காற்று மாசுபாடு காரணமாக இந்தியா-வங்கதேசம் இடையே நடைபெறவுள்ள முதல் டி.20 போட்டிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 3 டி.20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளன. முதல் டி.20 போட்டி நவம்பர் 3ஆம் தேதி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தற்போது டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாடு காரணமாக போட்டி நடத்தமுடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் போட்டி நடைபெற இன்னும் சில நாட்களே இருப்பதால் மைதானத்தை மாற்ற முடியாது என்றும், அதற்குள் மாசு பிரச்சனை குறைந்து விட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

கடந்த 2017ஆம் ஆண்டு இதே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றில், காற்று மாசுபாடுகாரணமாக இலங்கை அணியினர் மாஸ்க் அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP