Logo

72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸி. மண்ணில் சாதனை படைத்த இந்திய அணி!

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழையால் கைவிடப்பட்டதையடுத்து, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
 | 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்தியா வென்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. தொடர்ந்து 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 2-1என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றது. 

இரு அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 4வது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 622/7 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடி வந்த ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 

72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸி. மண்ணில் சாதனை படைத்த இந்திய அணி!

விறுவிறுப்பான நான்காம் நாள் ஆட்டம் மழையின் காரணமாக தாமதாகவே தொடங்கியது. பின்னர், தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 'பாலோ ஆன்' ஆனது. 31 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி 'பாலோ ஆன்' ஆனது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கி 4 ஓவரில் 6 ரன் எடுத்து மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில், 7 ரன்னில் இரட்டைச் சதத்தைத் தவறவிட்ட புஜாரா ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் வெற்றி மூலம் இந்தியா 3 சாதனைகளை படைத்துள்ளது. 

72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸி. மண்ணில் சாதனை படைத்த இந்திய அணி!

1947ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா விளையாடி வருகிறது. இந்நிலையில் முதல் முறையாக 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. 

அதேபோன்று ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றுள்ளது. 

72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸி. மண்ணில் சாதனை படைத்த இந்திய அணி!

மூன்றாவதாக, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை  விராட் கோலி பெற்றுள்ளார். இதுவரை பல்வேறு சாதனைகளை படைத்து வரும் விராட் கோலிக்கு இது முக்கிய சாதனை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

வாழ்த்துக்கள் கோலி & டீம்..

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP