தேசிய போட்டியில் பங்கேற்கும் தமிழக எறிபந்து அணிகள் அறிவிப்பு...!

ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள தேசிய எறிபந்து போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக அணிகளின் பெயர் பட்டியலை தமிழ்நாடு எறிபந்து சங்கம் வெளியிட்டுள்ளது.
 | 

ஹைதராபாத்தில் 26வது தேசிய சப்-ஜுனியர் எறிபந்து போட்டி வரும் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழக சிறுவர் மற்றும் சிறுமியர் அணிகள் பங்கேற்கின்றன. 

28 பேர் கொண்ட சிறுவர் அணியின் கேப்டனாக திருநெல்லியைச் சேர்ந்த செண்பகபாரதியும், சிறுமியர் அணியின் கேப்டனாக சென்னையைச் சேர்ந்த இளவேணியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

சிறுவர் அணியின் பயிற்சியாளராக கவியரசனும், மேலாளராக ஸ்ரீதரனும், சிறுமியர் அணியின் பயிற்சியாளராக தியாகு, மேலாளாராக திவ்யா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 15ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தூய இருதய மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழக அணிகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், தமிழ்நாடு எறிபந்து சங்கத் தலைவர் பாலவிநாயகம் தெரிவித்துள்ளார். 

தேசிய போட்டியில் பங்கேற்கும் தமிழக எறிபந்து அணிகள் அறிவிப்பு...!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP