விளையாட்டு வீரர்களுக்கு ஓர் நற்செய்தி...

தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள், தங்களுக்கு பண நெருக்கடி இருக்கும்பட்சத்தில், நிதியுதவி கோரி விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 | 

விளையாட்டு வீரர்களுக்கு ஓர் நற்செய்தி...

தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள், தங்களுக்கு பண நெருக்கடி இருக்கும்பட்சத்தில்,  நிதியுதவி கோரி மத்திய அரசுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களை yas.nic.in என்ற இணையதள முகவரியில் பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

விளையாட்டு வீரர்களுக்கான  மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பாக உயர்த்தப்படுவதாக, அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக நேற்று அளித்த பதிலில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP