15வது உலக சாதனை படைத்த தமிழக சிறுமி...குவியும் பாராட்டுக்கள்...!

திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையைச் சேர்ந்த பிரிஷா, தண்ணீரில் தன் கால்களை இடுப்பில் வைத்துக் கொண்டு ஒரு நிமிடத்தில் 18 முறை பேக்ஃபிலிப்ஸ் (Backflips) செய்து உலக சாதனை படைத்துள்ளார். 5ஆம் வகுப்பு படிக்கும் இவர் படைக்கும் 15வது உலக சாதனை இது.
 | 

திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையைச் சேர்ந்த பிரிஷா, பாளையங்கோட்டையில் உள்ள PBIS பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரிஷாவின் தாயார் தேவிபிரியாவும் யோகா செய்வதால், அவரும் பிரிஷாவுக்கு பெரும் உதவியாய் இருந்து வருகிறார். அதனால் இளம் வயதிலேயே மாநில மற்றும் தேசிய அளவிலான யோகா போட்டிகளில் பங்கேற்று, நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.  

15வது உலக சாதனை படைத்த தமிழக சிறுமி...குவியும் பாராட்டுக்கள்...!

யோகாவில் பதினான்காவது உலக சாதனையை படைத்த பின்,  பிரிஷாவுக்கு ஜெருசலேம் பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. 9 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் சிறுமி என்ற பெருமையும் இவரைச் சார்ந்துள்ளது. 

15வது உலக சாதனை படைத்த தமிழக சிறுமி...குவியும் பாராட்டுக்கள்...!

இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி பிரிஷா, தண்ணீரில் தன் கால்களை இடுப்பில் வைத்துக் கொண்டு ஒரு நிமிடத்தில் 18 முறை பேக்ஃபிலிப்ஸ் (Backflips) செய்து உலக சாதனை படைத்துள்ளார். 5ஆம் வகுப்பு படிக்கும் இவர் படைக்கும் 15வது உலக சாதனை இது. 

15வது உலக சாதனை படைத்த தமிழக சிறுமி...குவியும் பாராட்டுக்கள்...!

பிரிஷாவுக்கு ஏராளமான பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதில் சில... யோகா ராணி, யோகா கலா, யோகா ஸ்ரீ, யோகா ரத்னா, யோகா செல்வி, ஆசனாஸ்ரீ ஆகியவை. இளம் சாதனையாளர் என்ற பட்டத்தையும் பிரிஷா விட்டுவைக்கவில்லை. 

15வது உலக சாதனை படைத்த தமிழக சிறுமி...குவியும் பாராட்டுக்கள்...!

இவரது தாயாரும், பாட்டியும் யோகாவில் கை தேர்ந்தவர்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரே சமயத்தில் நீருக்குள் மூழ்கி ஆசனம் செய்வதே அடுத்த சாதனை எனக் கூறியுள்ளார் யோகா ரத்னா பிரிஷா. 

15வது உலக சாதனையை படைத்துள்ள பிரிஷாவுக்கு ஏராளமானோர் தங்கள் பாராட்டுக்களை சமூக வலைதளங்களிலும், நேரிலும் தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP