வாழ்வா? சாவா? போட்டியில் வாகை சூடுமா... இல்லை... மண்ணை கவ்வுமா பாகிஸ்தான்?!

செமி ஃபைனலுக்கு தகுதிபெறும் நான்காவது அணிக்கான போட்டியில் வங்கதேச அணியுடன் மல்லுக்கட்டி கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கு நியூசிலாந்து எதிரான இன்றைய போட்டி மிக மிக முக்கியமானது.
 | 

வாழ்வா? சாவா? போட்டியில் வாகை சூடுமா... இல்லை... மண்ணை கவ்வுமா பாகிஸ்தான்?!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பர்மிங்ஹாமில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் நியூசிலாந்து ஜெயித்தாலும், தோற்றாலும் அது, அந்த அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பாதிக்காது. ஆனால், செமி ஃபைனலுக்கு தகுதிபெறும் நான்காவது அணிக்கான போட்டியில் வங்கதேச அணியுடன் மல்லுக்கட்டி கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கு இப்போட்டி மிக மிக முக்கியமானது.

தென்னாப்பிரிக்க அணியுடனான வெற்றியை தொடர்ந்து, இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதியில் செல்வதற்கான ஜன்னல்கள் பாகிஸ்தானுக்கு திறக்கப்பட வாய்ப்புள்ளது. சரி.... அதற்கான சாத்தியக்கூறுகள் எந்த அளவுக்கு உள்ளதென பார்ப்போம்.

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தான் இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில், ஐந்து ஆட்டங்களில் வெற்றி, ஒன்றில் டிரா என, எந்த போட்டியிலும் தோல்வியே காணாத அணி என்ற கெத்துடன், 11 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது நியூசிலாந்து.

அந்த அணி தற்போது இருக்கும் ஃபாமில், குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மிகப் பெரிய குறை என்னவென்றால், நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிலையான ஆட்டத்தை தராமல் இருப்பது தான். இந்த குறையையும், கேப்டன் கேன் வில்லியம்சன் தமது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் சரி செய்துவிடுகிறார்.

வாழ்வா? சாவா? போட்டியில் வாகை சூடுமா... இல்லை... மண்ணை கவ்வுமா பாகிஸ்தான்?!

மற்றப்படி, அந்த அணியின் ஆல் -ரவுண்டர்கள் பேட்டிங், பௌலிங்கில் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். அதேபோன்று பௌலர்களும் தங்களுக்கான வேலையை ஒவ்வொரு மேட்சிலும் தரமாக முடித்து வருகின்றனர்.

இதற்கு நேர்மாறாக, பாகிஸ்தான் அணியின் பௌலிங் சொல்லி கொள்ளும்படியாக இல்லை. அந்த அணியின் தற்போதைய மிகப் பெரிய பலம், டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், தற்போது நல்ல ஃபாமில் உள்ளது தான். ஆனால், இது மட்டுமே நியூசிலாந்தை என்கவுன்ட்டர் செய்ய போதாது.

பாகிஸ்தான் அணி நினைத்தால், உலக தரத்திலான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் செய்யும். அதேசமயம், அதற்கு நேர்மாறாக உள்ளூர் அணியை போல மோசமாக விளையாடவும் செய்யும். இந்த இரண்டு விதத்தில், எந்த வகையான ஆட்டத்தை அந்த அணி இன்று வெளிப்படுத்த போகிறது என்பதை பொறுத்து தான், இன்றைய போட்டியின் வெற்றி, தோல்வி அமையும். 

வாழ்வா... சாவா... ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வாகை சூடுமா? அல்லது மண்ணை கவ்வுமா? பார்ப்போம்... தொடர்ந்து மேட்ச்சை பார்த்து என்ஜாய் பண்ணுங்க நண்பர்களே...

வாழ்வா? சாவா? போட்டியில் வாகை சூடுமா... இல்லை... மண்ணை கவ்வுமா பாகிஸ்தான்?!

வி.ராமசுந்தரம்,

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP