’கோலி வேகமாக இந்தியாவின் சிறந்த கேப்டனாக மாறி வருகிறார்’

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வேகமாக இந்தியாவின் சிறந்த கேப்டனாக மாறி வருகிறார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
 | 

இந்தூரில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அந்த அணியை இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணிக்கு 10 முறை இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ள விராட் கோலி, அதிக முறை இன்னிங்ஸ் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இந்திய கேப்டன் என்னும் சாதனையை படைத்ததோடு மட்டுமல்லாமல், தோனியின் சாதனையையும் முறியடித்துள்ளார்.  தோனி 9 முறை இன்னிங்ஸ் வெற்றிகளை பெற்றுத் தந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,இந்தியாவில் உள்ள பிட்ச்களின் நிலையை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், வங்கதேச அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு கோலியை ஒரு வரியில் பாராட்டியுள்ளார்.

’கோலி வேகமாக இந்தியாவின் சிறந்த கேப்டனாக மாறி வருகிறார்’

இங்கிலாந்திற்காக 82 டெஸ்ட் மற்றும் 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வாகன், ‘இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வேகமாக இந்தியாவின் சிறந்த கேப்டனாக மாறி வருகிறார்’ என்று, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கோலி தற்போது 52 டெஸ்ட் போட்டிகளில் 32 வெற்றிகளைப் பெற்றுள்ளார். இந்தியாவின் எந்தவொரு கேப்டனும் இதுபோன்ற வெற்றியை பெற்றதில்லை. தோனி 60 ஆட்டங்களில் 27 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP