சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள காட்டு வேப்பிலைப்பட்டியில் 16 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சத்து 5 ஆயிரம் சதுர அடியில் ரூ.8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
 | 

சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள காட்டு வேப்பிலைப்பட்டியில் 16 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சத்து 5 ஆயிரம் சதுர அடியில் ரூ.8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, உதயகுமார், தங்கமணி மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய முதல்வர், "புதிய கிரிக்கெட் மைதானத்தை இளைஞர்கள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். இளைஞர்கள் தங்கள் திறமை மூலம் புதிய கிரிக்கெட் மைதானத்தை சர்வதேச அளவில் புகழ்பெற செய்ய வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு விளையாட்டில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்." என கூறினார் 

                                                சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம்

இந்த விழாவில் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் பேசுகையில், அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்துதான் உருவாக இருக்கிறார்கள்.சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.  இந்த மைதானத்தில் என்னால் விளையாட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது என கூறினார்.
பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் பேசுகையில் , சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி கண்டிப்பாக பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.

                                                 சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம்

அதன்பிறகு புதிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பந்துவீச முதல்வர் பழனிசாமி பேட்டிங் செய்து மகிழ்ந்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP