இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 468 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 | 

இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

 இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 468 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி 117 ரன்களும் எடுத்தது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சிசை விளையாடிய இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. பிராவோ 18, புரூக்ஸ் 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர். அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 423 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்த தொடரில் இந்திய அணி பந்துவீச்சாளார்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளதால், இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP