வெஸ்ட் இண்டீஸை வெளுத்துக்கட்டும் வெறியுடன் களமிறங்கியுள்ள இந்திய அணி!

உலகக்கோப்பை தொடரில் தான் இதுவரை பங்கேற்றுள்ள ஆறு போட்டிகளில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு பரிதாபகரமான நிலையில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி.
 | 

வெஸ்ட் இண்டீஸை வெளுத்துக்கட்டும் வெறியுடன் களமிறங்கியுள்ள இந்திய அணி!

உலகக்கோப்பை தொடரில்  தான் இதுவரை ஆடியுள்ள ஆறு போட்டிகளில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றி பெற்று, மூன்றே புள்ளிகளுடன் பட்டியலில் எட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு பரிதாபகரமான நிலையில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி.

இத்தொடரில் தாம் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில்  4-இல் வெற்றி, ஒரு ஆட்டத்தில் டிரா என, தோல்வியே காணாமல் 9 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இந்திய அணி. இப்படி வெவ்வேறு நிலைகளில் உள்ள இரு அணிகளும், மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் தற்போது மோதி வருகின்றன.

கிறிஸ் கெயின், ஆன்ட்ரூ ரசூல் என பேட்டிங்கில் குறிப்பிட்ட சில நபர்களை மட்டுமே நம்பியிருப்பது, ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பௌலிங்கும் சொல்லி கொள்ளும்படி இல்லாதது, மோசமான பீல்டிங் என, மூன்று டிபார்ட்மென்டிலும் தொடர்ந்து சொதப்பி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியால், இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற முடியுமா?  அப்படியே வெற்றி பெற்றாலும், அதனால் அந்த அணிக்கு என்ன பயன்?  என  பல்வேறு கேள்விகள் எழதான் செய்கிறது.

வெஸ்ட் இண்டீஸை வெளுத்துக்கட்டும் வெறியுடன் களமிறங்கியுள்ள இந்திய அணி!

ஆனால், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை தோல்வியே அடையாத அணி என்ற கெத்து குறையாமல் இருக்கவும், அரையிறுதி சுற்றுக்கு தகுதிப் பெறுவதை மேலும் உறுதி செய்து கொள்ளவும், ஆப்கானிஸ்தானிடம் சொதப்பிய பேட்டிங்கை மீண்டும் பழைய ஃபார்முக்கு கொண்டு வரவும் என, இந்திய அணிக்கு பலவிதத்தில் இந்தப் போட்டி மிகவும் முக்கியமானது.

ஓல்டு டிராஃபோர்டு மைதானம், பேட்டிங்கிற்கு வசதியான பிட்ச் என்பதால், டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்யும். அதன்படி, இந்திய அணி கேட்பன் விராட் கோலி, தமது அணியினரை முதலில் பேட்டிங் செய்ய வைத்துள்ளதில் ஆச்சர்யம் அடைவதற்கு ஒன்றுமில்லை.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், பௌலிங்கிலும் இந்திய அணி வீரர்கள் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருவேளை இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஜெயிக்கப் போவதென்னவோ இந்தியா தான்! தொடர்ந்து மேட்ச் பார்த்து என்ஜாய் பண்ணுங்க...

வெஸ்ட் இண்டீஸை வெளுத்துக்கட்டும் வெறியுடன் களமிறங்கியுள்ள இந்திய அணி!

வி.ராமசுந்தரம்,

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP