வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு தாமதம்?

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
 | 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு தாமதம்?

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் நேற்று நடைபெறவிருந்த பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் திடீரென வருகிற 21ம் தேதிக்கு(ஞாயிற்றுக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி குறித்த அறிவிப்பு தாமதமாகியுள்ளது. கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதன் மூலம், தேர்வு விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் என்று தெரிகிறது. 

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP