இந்தியா அபார வெற்றி: ரஹானே ஆட்டநாயகன்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 | 

இந்தியா அபார வெற்றி: ரஹானே ஆட்டநாயகன்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆண்டிகுவாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கும், வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்களுக்கும் ஆல்அவுட் ஆனது.

4-வது நாள் ஆட்டமான நேற்று ரஹானே(சதம்), விகாரியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 343 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்காக 419 ரன்கள் நிர்ணயித்தது. ரஹானே 102, விஹாரி 93 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து, இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள், இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 100 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனார்கள். இதன்மூலம் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய பும்ரா வெறும் 7 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இஷாந்த் சர்மா 3, ஷமி 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஆட்ட நாயகன் விருதை ரஹானே பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP