இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று: எந்த இளம் அணி ஜெயிக்கும்?

இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது.
 | 

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று: எந்த இளம் அணி ஜெயிக்கும்?

இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது.

இதில், முதலில் டி20 தொடருக்கான முதல் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹெச்பிசிஏ மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த அதிர்ச்சியில் இருந்து நீண்ட தூரத்தை கடந்துவிட்டன. இந்தியா டி20 போட்டிகளில், மற்ற போட்டிகளைபோல சிறப்பாக செயல்பட்டதில்லை. ரவிசாஸ்திரியின் கூறியதுபோல, குறுக்கிய ஓவர் கொண்ட போட்டிகளில் விளையாட்டு பாணியை புதுப்பிக்கப்போகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய அணுகுமுறை, வெஸ்ட் இண்டீஸ் அணியை டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் ஓயிட் வாஷ் செய்ததன் மூலம் தெரிந்துள்ளது. இது,  2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசையில் கோலி, ரோகித் சர்மா, தவான் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர். மிடில் ஆர்டரில் தான் அணி நிர்வாகத்தின் கவனம் வெகு காலமாக உள்ளது.

மனீஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் சிறப்பாக விளையாடினாலும், அது தொடர்ச்சியாக விளையாடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அது அவரிடம் இருந்து தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். குறுகிய வடிவிலான போட்டியில் ராகுல் நன்றாக விளையாடி வருகின்றார். நான்காவது இடத்தில் அவர் களமிறக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கலாம். ஆனால், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சோபிக்காததால், ராகுல் மீதான எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று: எந்த இளம் அணி ஜெயிக்கும்?

தோனி அணியில் இல்லாதது பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிட்டிங்கில் தோனியை போல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ரிஷாப் பண்ட், நிலைத்தன்மை, ஷாட் தேர்வு மற்றும் அழுத்தத்தைக் கையாளும் திறன் ஆகியவை அவரிடம் உண்மையில் இல்லை.

இந்திய அணியின் பவுலிங்கில் கலக்கும் பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய தீபக் சாஹர், நவ்தீப் சைனி மற்றும் கலீல் அகமது ஆகியோருக்கு அழுத்தத்தை கையாள வாய்ப்பளித்துள்ளனர் தேர்வுக்குழுவினர்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று: எந்த இளம் அணி ஜெயிக்கும்?

8ஆவது வரிசையில் களமிறங்கும் ஜடேஜா வரைக்கும் இந்திய அணிக்கு பேட்டிங் செய்ய ஆள் இருக்கும் என்பதால் சேஸிங்கிலும், முதலில் பேட் செய்தாலும் அதிக ரன்களை எடுக்க முடியும். ஆனால்  சிறிது அனுபவமற்ற வீரர்கள் மிடில் ஆர்டர் உடைந்துவிட வாய்புள்ளது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தாமல் இருக்கக்கூடிய பொறுப்பு ரிஷாப் பண்ட், மனிஷ் பாண்டே கைகளில்தான் உள்ளது.

தென்னாப்பிரிக்கா

புதிய கேப்டன் குயின்டான் டிகாக் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்குகிறது. இந்தியாவில் சுழற்பந்து வீச்சை சமாளிக்க திணறும் அந்த அணி, அதற்காக பெங்களூருவில் சில மாதங்களுக்கு முன் அந்த அணியில் சில வீரர்கள் சுழற்பந்துவீச்சு முகாமில் பங்கேற்றனர். ஒரு சில வீரர்களுக்கு உலகம் முழுவதும் வெவ்வேறு டி 20 லீக் விளையாடுவதில் நல்ல அனுபவம் இருந்தாலும், தற்போதுள்ள அந்த அணி சர்வதேச அனுபவத்தில் குறைவாகவே உள்ளது.

ஆம்லா, டுமினி, இம்ரான் தாஹீர் ஓய்வு, டு பிளிசஸ் இல்லாததால்,  டிகாக், தெம்பா பாவுமா மற்றும் வான் டெர் டஸ்ஸன் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டியுள்ளது. பவுலிங்கில் ரபடா, அன்ரிச் நார்டேஜ் இந்த தொடரில் முத்திரை பதிக்க காத்துக்கொண்டிருக்கின்றனர்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு, நல்ல அணியை உருவாக்க அந்த அணிக்கு நேரமில்லை, அதனால் அந்த விளையாட இருக்கும் ஒன்பது டி20 போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒவ்வொன்றும் பாரிய முக்கியத்துவம் வாய்ந்தவை. டேவிட் மில்லர், ஆண்டில் பெஹ்லுக்வாயோ, மற்றும் குயின்டன் டி கோக் போன்றவர்களுடன் டி20 நிபுணத்துவம் வாய்ந்த ஒரு அணி அவர்களிடம் உள்ளது. ஆனால், அவர்களின் ஃபார்ம் கொஞ்சம் கவலை அளிக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வெல்லவே இரு அணிகளின் கேப்டங்களும் விரும்புவார்கள் என தெரிகிறது, ஏனென்றால், இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது, டக்வொர்த் லூயிஸ் முறையினால் ஜெயிக்கும் நிலையில் இருக்கும் ஆட்டம் மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே, டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்யும்.

தர்மசாலாவில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால், போட்டியின் தொடக்க நேரம வரை மழை நீடிக்கவாய்ப்பில்லை இருப்பினும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்கா கடைசியாக இங்கு விளையாடிய இரு போட்டிகளிலும் இந்தியா சேஸ் செய்து வென்றுள்ளதால், அந்த அணி நம்பிக்கையுடன் உள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் அணி 175 ரன்கள் குவித்தால், இரண்டாவது பேட்டிங் செய்யும் அதை துரத்தி பிடிக்க முடியும்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று: எந்த இளம் அணி ஜெயிக்கும்?

இரு அணிகளிலும் அனுபவம் வாய்ந்த முக்கிய வீரர்கள் இல்லாததால்,இளம்வீரர்களை கொண்ட போட்டியாக இது இருக்கும். ஸ்பீன்னரகளை எதிர்கொள்ள திணறும், தென்னாப்பிரிகாவுக்கு வேகப்பந்துவீச்சே பலம். இந்தியா சொந்த ஊரில், ரசிகர்களின் பலத்துடன் விளையாடும் என்பதால், இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

இவ்விரு அணிகளும் இதுவரை டி20 போட்டியில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியது. இதில், இந்தியா 8, தென்னாப்பிரிக்கா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று: எந்த இளம் அணி ஜெயிக்கும்?

வி.ராமசுந்தரம்,

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்.

 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP