இந்தியா ஓபன்: சாய்னா நேவால் விலகல்...!

உடல்நலக் குறைவு காரணமாக இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் நீக்கப்பட்டுள்ளார்.
 | 

இந்தியா ஓபன்: சாய்னா நேவால் விலகல்...!

உடல்நலக் குறைவு காரணமாக இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் விலகியுள்ளார். 

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி வருகின்றன 26ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. மொத்தம் ரூ.2.4 கோடி பரிசுத்தொகைக்கான கொண்ட இந்த போட்டித் தொடரில் இருந்து  இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் காலிறுதியின் போது வயிற்று கோளாறினால் துடித்து போன சாய்னா நேவால் அதன் பிறகு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் இந்திய ஓபனில் தன்னால் ஆட இயலாது என்று இந்திய பேட்மிண்டன் சம்மேளனத்திற்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். முன்னதாக அவர் சுவிஸ் ஓபன் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP