இந்தியா 497 ரன்களுக்கு டிக்ளேர்; முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா  

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
 | 

இந்தியா 497 ரன்களுக்கு டிக்ளேர்; முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா  

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

ராஞ்சியில் நேற்று தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இன்று நடைபெற்று வரும் 2ஆவது நாள் ஆட்டத்தில், இந்தியா முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 497 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. உமேஷ் யாதவ்  10 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்து துவம்சம் செய்தார்.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212, ரஹானே 115, ஜடேஜா 51 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் லிண்டே 4, ரபாடா 3 விக்கெட்டுளை கைப்பற்றினார்கள். 

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடிய தென்னாப்பிரிக்கா ஆட்டத்தின் முதல் ஓவரின் 2ஆவது பந்திலேயே விக்கெட்டை இழந்தது. ஷமி பந்துவீச்சில் எல்கர் ஆட்டமிழந்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP