308 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணிக்கு 316 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 | 

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்தது. பக்கர் ஜமான் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன் பிறகு ஜோடி சேர்ந்த இமாம் உல் ஹக், பாபர் அஸாம் சிறப்பாக விளையாடினர். பாபர் அஸாம் 96 ரன்னிலும்,  இமாம் உல் ஹக் 100 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 2 -ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 157 ரன்களை சேர்த்து. 99 பந்தில் முதல் உலகக்கோப்பை சதத்தை பதிவு செய்தார் இமாம் உல் ஹக்.

ஹபீஸ் 27, இமாத் வசிம் 43 ரன்கள் எடுத்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். வங்கதேசம் தரப்பில் முஸ்தாபீகர் ரஹ்மான் 5, சைய்புதீன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

308 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்புள்ளது. ஆனால், அது நடப்பதற்கு வாய்ப்பு குறைவே.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP