உலகக் கோப்பை ஹாக்கி: களை கட்டும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை !

ஒடிசாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் துவக்க விழா மற்றும் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டை முதலமைச்சர் நவீன் பட்நாயக் இன்று வெளியிட்டார். ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கி தற்போது களை கட்டியுள்ளது.
 | 

உலகக் கோப்பை ஹாக்கி: களை கட்டும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை !

ஒடிசாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் துவக்க விழா மற்றும் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டை முதலமைச்சர் நவீன் பட்நாயக் இன்று வெளியிட்டார்.  ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கி சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் முன்பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர். 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் 28-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, இங்கிலாந்து, மலேசியா, கனடா, பாகிஸ்தான், சீனா, பெல்ஜியம், ஜெர்மனி, நியூசிலாந்து, ஸ்பெயின், அயர்லாந்து, பிரான்ஸ், அர்ஜென்டினா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகியா 16 நாடுகள் பங்கேற்கின்றனர். 
 
புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 27-ம் தேதி கண்கவர் நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா நடைபெற உள்ளது. கட்டாக்கில் உள்ள பாரபட்டி ஸ்டேடியத்தில் உலகக்கோப்பை கொண்டாட்ட நிகழ்ச்சியுடன், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 

உலகக் கோப்பை ஹாக்கி: களை கட்டும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை !

இந்நிலையில், தொடக்க விழாவிற்கான ஆன்லைன் டிக்கெட்டை ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் இன்று வெளியிட்டார். ஆன்லைனட் டிக்கெட்டை http://ticketgenie.in/event/hwc-opening-ceremony என்ற இணைதளத்தில் முன் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணிக்கு ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கியதும், ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.    தொடக்க விழாவிற்கு சுமார் 10500க்கு மேலும், மறுநாள் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு 30 ஆயிரம் டிக்கெட்டுகளும் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP