உலக கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தியது அர்ஜென்டினா...!

14வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டியில் ‘ஏ‘ பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் நேற்று மோதின. விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்றது.
 | 

உலக கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தியது அர்ஜென்டினா...!

உலக கோப்பை ஹாக்கி தொடரில் அர்ஜென்டினா அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

14வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி ஒடிசாவில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் மோதின. விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தில் அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் பதிலடி கொடுத்து கோல் அடித்து வந்தனர். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் சமநிலை பெற்றது. ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் பெய்லாட் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இறுதியில் அர்ஜென்டினா அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP