தேசிய சீனியர் ஹாக்கி:  துவக்க ஆட்டத்தில் தமிழக அணி அசத்தல் !

சென்னையில் நடைபெற்றுவரும் தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் தமிழக அணி தனது துவக்க ஆட்டத்தில் 4க்கு2 என்ற கோல்களில் பலம்வாய்ந்த சி.ஐ.எஸ்.எப். அணியை வீழ்த்தியது. 2 நிமிடங்கள் இருந்தபோது தமிழக அணிக்கு 3வது பெனால்டி கார்னர்...
 | 

தேசிய சீனியர் ஹாக்கி:  துவக்க ஆட்டத்தில் தமிழக அணி அசத்தல் !

சென்னையில் நடைபெற்றுவரும் தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் தமிழக அணி தனது துவக்க ஆட்டத்தில் 4க்கு2 என்ற கோல்களில் பலம்வாய்ந்த சி.ஐ.எஸ்.எப். அணியை வீழ்த்தியது. 

சென்னையில் எழும்பூர் மற்றும் ஐ.சி.எப். ஆகிய இரு இடங்களில் 9வது ஹாக்கி இந்தியா சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது.

நேற்று (டிச.9) நடைபெற்ற ஜி பிரிவு ஆட்டத்தில் தமிழக அணி தனது துவக்க ஆட்டத்தில் பலம் வாய்ந்த அணியான சி.ஐ.எஸ்.எப். அணியை எதிர்கொண்டது. தமிழக அணிக்கு ஆவலுடன் எதிர்பாக்கப்பட்ட ஸ்ரீஜேஷ் ஆடவில்லை. செந்தில் தலைமையிலான தமிழக அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே ஜோஷ்வா ஒரு அபார பீல்டு கோல் அடித்து 1க்கு 0 என அணியை முன்னிலை பெறச் செய்தார். 

தேசிய சீனியர் ஹாக்கி:  துவக்க ஆட்டத்தில் தமிழக அணி அசத்தல் !

20வது நிமிடத்தில் தமிழக அணிக்கு கிடைத்த பெனால்டி ஷாட் வாய்ப்பில் வினோதன் அடித்த பந்தை எதிரணி கோல்கீப்பர் வீர் பகதூர் குப்தா மிக அபாரமாக தடுத்ததால் தமிழக அணி கோல் வாய்ப்பை இழந்தது.

30வது நிமிடத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் அதிப் அதீக் பீல்டு கோல் அடித்து சமன் செய்தார். அதே நிலையில் முதல்பாதி ஆட்டம் முடிந்தது.

பின்னர் ஆட்டம் துவங்கியதும், 34வது நிமிடத்தில் தமிழக அணி வீரர் ராயர் வினோத் சகவீரர் சண்முகத்திடம் இருந்து பெற்ற பந்தை மிக அபாரமாக கோலுக்குள் தள்ளி 2க்கு 1 என முன்னிலை பெறச்செய்தார். 43வது நிமிடத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் ஹர்ப்ரீத் சிங் நடுக்களத்தில் இருந்து அடித்த பந்தை கோல் எல்லைக்கு அருகில் இருந்த நிரஜ் யாதவ் மிக அபாரமாக கனெக்ட் செய்து கோல் அடித்தார். இதனால் மீண்டும் 2க்கு 2 என டிரா ஆனது.

தேசிய சீனியர் ஹாக்கி:  துவக்க ஆட்டத்தில் தமிழக அணி அசத்தல் !

இதற்கு அடுத்த 2 நிமிடங்களில் தமிழக அணி மீண்டும் 3க்கு2 என முந்தியது. அப்போது தமிழக அணிக்கு செல்வராஜ் கோலடித்தார். இதற்கிடையில் சி.ஐ.எஸ்.எப். அணி வீரர்கள் எவ்வளவோ முயன்றும் சமன் செய்ய முடியவில்லை.

ஆட்டம் முடிய 2 நிமிடங்கள் இருந்தபோது தமிழக அணிக்கு 3வது பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதில் மணிகண்டன் கோல் அடித்து தமிழக அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 4க்கு2 என்ற கோல்களில் சி.ஐ.எஸ்.எப். அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

நாளை  (டிச.11) காலை 7.30 மணிக்கு ஐ.சி.எப். மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தமிழக அணி அசாம் அணியுடன் மோதுகிறது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP