தேசிய சீனியர் ஹாக்கி: தமிழக அணி கோல் மழை....!

சென்னையில் நடைபெற்றுவரும் தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் நேற்று (டிச.11) நடைபெற்ற ஆட்டத்தில், தமிழக அணி 13க்கு 1 என்ற கோல் கணக்கில் கோல்மழை பொழிந்து அசாமை வீழ்த்தியது.
 | 

9வது ஹாக்கி இந்தியா சீனியர் ஆண்கள் போட்டி சென்னையில் நடைபெற்றுவருகிறது. 5வது நாளான நேற்று (டிச.11) நடைபெற்ற ஜி பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணியும் அசாம் அணியும் மோதின. ஆட்டம் துவங்கிய 8வது நிமிடத்தில் ராயர் அடித்த பீல்டு கோல் மூலம் 1-0 என தொடங்கிய தமிழக அணி முதல்பாதி ஆட்டத்தின் முடிவில் 6-1 என முன்னிலை வகித்தது. அசாம் அணிக்கு சுபம்சிங் 29வது நிமிடத்தில் ஒரு பீல்டு கோல் அடித்தார்.

தேசிய சீனியர் ஹாக்கி: தமிழக அணி கோல் மழை....!

2வது பாதி ஆட்டத்திலும் தமிழக அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. அசாம் அணியினர் பலமுறை முயன்றும் மேற்கொண்டு கோல் போட முடியவில்லை. முடிவில் தமிழக அணி 13-1என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதன் மூலம் தமிழக அணி தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

தமிழக அணி வரும் 13ஆம் தேதி புதுச்சேரியை எதிர்கொள்கிறது. 

நேற்று நடைபெற்ற மற்ற ஆட்டங்களில் மகாராஷ்டிரா 5-3 என தெலுங்கானாவையும், மணிப்பூர் 19-0 என அந்தமானையும், சத்தீஷ்கர் 3-2 என ஆந்திராவையும், எப்.சி.ஐ.அணி 8-1 என ஹிமாசல் பிரதேசத்தையும், டெல்லி 4-3 என கேரளைவையும் வென்றன. மத்தியப் பிரதேசம் மற்றும் மிசோரம் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற டிராவில் முடிந்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP