தேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி !

சென்னையில் நடைபெற்றுவரும் 9வது ஹாக்கி இந்தியா சீனியர் ஆண்கள் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் தமிழக அணி 6-5 என்ற கோல் கணக்கில் சாய் (இந்திய விளையாட்டு ஆணையம்) அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
 | 

தேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி !

சென்னையில் நடைபெற்றுவரும் 9வது ஹாக்கி இந்தியா சீனியர் ஆண்கள் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் தமிழக அணி 6-5 என்ற கோல் கணக்கில் சாய் (இந்திய விளையாட்டு ஆணையம்) அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

மொத்தம் 41 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் நடத்தப்பட்டது. இதில் எச் பிரிவிலிருந்து அரையிறுதி வரை முன்னேறிய சாய் அணி முன்னதாக லீக் ஆட்டங்களில் கோவா, ஸ்டீல் பிளாண்ட், அகில இந்திய போலீஸ், மத்திய பாரத் ஆகிய அணிகளை வென்றும், கூர்க் அணியுடன் சமன் செய்தும் 13 புள்ளிகள் பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. காலிறுதியில் மகாராஷ்டிரா அணியை 2-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இதே போல் ஜி பிரிவிலிருந்து அரையிறுதி வரை முன்னேறிய தமிழக அணி, முன்னதாக லீக் ஆட்டங்களில்   சி.ஐ.எஸ்.எப்., அசாம், புதுச்சேரி, ஹிமாசல பிரதேசம் ஆகிய 4 அணிகளையும் வீழ்த்தி, 12 புள்ளிகள் பெற்று காலிறுதிக்குள் நுழைந்து. அதில் எஸ்.எஸ்.பி. (எல்லை பாதுகாப்பு படை) அணியை 3-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டது. 

தேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி !

முழுவதும் இளம் வீரர்களைக்கொண்ட சாய் அணியும், அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் இரண்டும் கலந்த தமிழக அணியும் ஆட்டம் துவங்கியது முதல் அபாராமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தியது. 9வது நிமிடத்தில் சாய் அணி வீரர் பாபி சிங் தாமி பீல்டு கோல் அடித்து 1-0 என கோல் கணக்கை துவங்கினார். 13வது நிமிடத்தில் ஜோஸ்வா பாஸ் செய்து தந்த பந்தை சண்முகம் கோலுக்குள் திணித்தார். இதன் மூலம் ஆட்டம் சமநிலைக்கு வந்தது. 

இதற்கு அடுத்த 5 நிமிடங்களில் தமிழக அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் வினோதன் கோலடித்து 2-1 என உயர்த்தினார். இந்த முன்னணி 5 நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. சாய் அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் மொகித் குமார் கோலுக்குள் தள்ளி ஆட்டத்தை 2-2 என சமன்செய்தார். இந்த நிலையில் முதல்பாதி ஆட்டம் முடிந்தது.

தேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி !

ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் தமிழக அணி வீரர் ராயர் மிக அபாரமான பீல்டு கோல் அடித்து மீண்டும் 3-2 என உயர்த்தினார். இதற்கு அடுத்த நிமிடத்திலேயே சாய் அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் ராகுல்குமார் கோலடித்து என சமன் செய்தார். அதன்பிறகு 20 நிமிட ஆட்டம் கடுமையான போராட்டமாக இருந்தது. இரு அணிகளில் இருந்தும் மேற்கொண்டு கோல் இல்லாததால் ஷீட்அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது.

ஷூட் அவுட்டில் தமிழக அணி 3-2 எனவும் மொத்தத்தில் 6-5 எனவும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தமிழக அணிக்கு ஷூட் அவுட்டில் செந்தில் நாயகம், ஆர்.மணிகண்டன், எஸ்.மணிகண்டன் ஆகியோர் கோலடித்தனர். சாய் அணிக்கு விஷால், லோகேஷ் போரா ஆகிய இருவரும் கோலடித்தனர்.

இன்று (ஜன.19) நடைபெறவுள்ள மற்றொரு அரையிறுதிப் போட்டியில் மத்திய தலைமைச் செயலக அணியும், பெங்களுரு அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் தமிழக அணி மோதுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP