தேசிய சீனியர் ஹாக்கி: மகாராஷ்டிரா, பெங்களூர் காலிறுதிக்கு முன்னேற்றம்..!

சென்னையில் நடைபெற்றுவரும் தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் மகாராஷ்டிரா, பெங்களூரு ஆகிய அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. தமிழக அணி நாளை (டிச.13) தனது 3வது லீக் வாய்ப்பில் புதுச்சேரி அணியுடன் மோதுகிறது.
 | 

தேசிய சீனியர் ஹாக்கி: மகாராஷ்டிரா, பெங்களூர் காலிறுதிக்கு முன்னேற்றம்..!

சென்னையில் நடைபெற்றுவரும் தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் மகாராஷ்டிரா, பெங்களூரு ஆகிய அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

9வது ஹாக்கி இந்தியா சீனியர் ஆண்கள் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவைச் சேர்ந்த மகாராஷ்டிரா, மத்திய பிரதேச அணிகளுக்கு இடையே இன்று (டிச.12) நடைபெற்ற ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணி 2-1 என்ற கோல்களில் வெற்றி பெற்று 4வது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 12 புள்ளிகள் குவித்து இப்பிரிவில் முதலிடம் பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

பி பிரிவைச் சேர்ந்த சசாஷ்த்ரா சீமா பல் (எல்லை பாதுகாப்பு படை அணி) 3-2 என்ற கோல்களில் ஜம்மு காஷ்மீர் அணியை தோற்கடித்து 3வது வெற்றியை பெற்றது. ஒரு ஆட்டத்தில் சமன் அடைந்ததன் மூலம் மொத்தம் 10 புள்ளிகள் பெற்று இப்பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது.

தேசிய சீனியர் ஹாக்கி: மகாராஷ்டிரா, பெங்களூர் காலிறுதிக்கு முன்னேற்றம்..!

சி பிரிவில் மத்திய தலைமை செயலக அணி 12-0 என மிசோரத்தை வென்றது.  4 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி கண்டதன் மூலம் மத்திய தலைமை செயலக அணி 12 புள்ளிகள் பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

டி பிரிவில் பெங்களூரு அணி 8-2 என்ற கோல்களில் ஆந்திராவை தோற்கடித்து 3வது வெற்றி பெற்றது. ஏற்கனவே ஒரு டிரா செய்திருந்த இந்த அணி 10 புள்ளிகள் பெற்று சத்தீஸ்கர் அணியுடன் சமநிலை பெற்றது. கோல்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி (27 கோல்கள்) காலிறுதிக்கு தகுதி பெற்றது. சத்தீஸ்கர் 18 கோல்களில் இருந்ததால் காலிறுதி வாய்ப்பை நழுவவிட்டது. 

ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி நாளை (டிச.13) தனது 3வது லீக் வாய்ப்பில் புதுச்சேரி அணியுடன் மோதுகிறது.  இந்த ஆட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.  தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இரு அணிகளும் தலா இரண்டு வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP