தேசிய சீனயர் ஹாக்கி: ஜம்மு காஷ்மீர் கேப்டன் கரன்ஜித் சிங் அதிரடி கோல்கள்...!

9வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் நேற்று (டிச.8) நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஜம்மு காஷ்மீர் அணியின் கேப்டன் கரன்ஜித் சிங் 8 கோல்கள் அடித்து அசத்தினார். ஜம்மு காஷ்மீர் அணி 12க்கு 0 என்ற கோல் கணக்கில் அந்தமான் அணியை வீழ்த்தியது.
 | 

தேசிய சீனயர் ஹாக்கி: ஜம்மு காஷ்மீர் கேப்டன் கரன்ஜித் சிங் அதிரடி கோல்கள்...!

சென்னையில் நடைபெற்றுவரும் 9வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் நேற்று (டிச.8) நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஜம்மு காஷ்மீர் அணியின் கேப்டன் கரன்ஜித் சிங் 8 கோல்கள் அடித்து அசத்தினார். இதனால் ஜம்மு காஷ்மீர் அணி 12க்கு 0 என்ற கோல் கணக்கில் அந்தமான் அணியை வீழ்த்தியது. 

சென்னையில், 9வது ஹாக்கி இந்தியா சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. நேற்று (டிச.8) ஐ.சி.எப்.பில் நடைபெற்ற ஆட்டங்களில் குஜராத் 3க்கு 2 என்ற கோல்களில் மிசோரத்தையும், மத்திய தலைமை செயலகம் அணி 2க்கு 0 என்ற கோல்களில் மத்திய பிரதேச அணியையும் வீழ்த்தின. பெங்களூரு அணிக்கும் சத்தீஸ்கர் அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டம் 3க்கு 3 என டிராவில் முடிந்தது.

தேசிய சீனயர் ஹாக்கி: ஜம்மு காஷ்மீர் கேப்டன் கரன்ஜித் சிங் அதிரடி கோல்கள்...!

எழும்பூரில் நடைபெற்ற ஏ பிரிவு அணிகளுக்கான போட்டியில் மத்திய பிரதேச ஹாக்கி அகாடமி அணி 10க்கு  1 என்ற கோல் கணக்கில் தெலுங்கானா அணியை எளிதாக வீழ்த்தியது. மகாராஷ்டிரா அணி 10க்கு 0 என்ற கோல் கணக்கில் பீகார் அணியை வென்றது. இதில் மகாராஷ்டிராவுக்கு பூஷன் தேரே, ஹாட்ரிக் உள்பட 4 கோல்களை அடித்து அசத்தினார். 

தேசிய சீனயர் ஹாக்கி: ஜம்மு காஷ்மீர் கேப்டன் கரன்ஜித் சிங் அதிரடி கோல்கள்...!

பி பிரிவு அணிகளுக்கான ஆட்டம் ஒன்றில் ஜார்கண்ட் 2க்கு 0 என மணிப்பூரையும், ஜம்மு காஷ்மீர் அணி 12க்கு 0 என அந்தமான் நிகோபர் அணியையும் வென்றது. ஜம்மு காஷ்மீர் அணியின் கேப்டன் கரன்ஜித் சிங் ஹாட்ரிக் கோல்கள் உள்பட மொத்தம் 8 கோல்கள் அடித்து இந்த அணியின் கோல்மழைக்கு காரணமானார். 

தமிழக அணி இன்று (டிச.9) தனது முதல் ஆட்டத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) அணியுடன் மோதுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP