தேசிய சீனியர் ஹாக்கி: 3வது வெற்றியை பதிவு செய்தது மத்திப் பிரதேசம் !

சென்னையில் நடைபெற்றுவரும் சீனியர் தேசிய ஹாக்கி போட்டியில் இன்று நடந்த மத்திய பிரதேச ஹாக்கி அகாடமி அணி 5க்கு0 என்ற கோல்களில் உத்தரகாண்ட் அணியை வீழ்த்தி தனது 3வது வெற்றியை பதிவு செய்தது.
 | 

9வது ஹாக்கி இந்தியா சீனியர் ஆண்கள் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. 4வது நாளான இன்று நடைபெற்ற ஏ பிரிவு ஆட்டம் ஒன்றில் மத்திய பிரதேச ஹாக்கி அகாடமி அணி 5-0 என உத்தரகாண்ட் அணியை வீழ்த்தி  3வது வெற்றியை பதிவு செய்தது. இந்த அணி முதல் 15 நிமிடங்களில் 5 கோல்களை எடுத்து முன்னணி பெற்று, அதே நிலையில் ஆட்டத்தை முடித்தது. மத்திய பிரதேச அணிக்கு தாலம் பிரியபோடா, சானிக் ஹிமான்சு, ஹர்துவா ஆதர்ஷ், பிரசாத்  விவேக், ரஜாக் விகாஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 

மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கானா, பீகார் அணிகள் மோதின. இதில் தெலுங்கானா அணி 6-2 என்ற கோல் கணக்கில் பீகாரை வீழ்த்தியது. தெலுங்கானா அணி வீரர் போடிகம் ராமகிருஷ்ணா ஹாட்ரிக் கோல் அடித்து வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

தேசிய சீனியர் ஹாக்கி: 3வது வெற்றியை பதிவு செய்தது மத்திப் பிரதேசம் !

பி பிரிவில் நடந்த ஆட்டங்களில் சசாஷ்திர சீமா பல் 6க்கு2 என ஜார்கண்டையும், மணிப்பூர் அணி 5க்கு1 என்ற கோல்களில் ஜம்மு காஷ்மீரையும் தோற்கடித்தது.

டி பிரிவில் இடம்பெற்றுள்ள பெங்களூர் அணியும், பெரிய துறைமுகங்கள் (மேஜர் போர்ட்ஸ்) அணியும் மோதின. இதில் ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் பெங்களூர் வீரர் முடாகர் ஹரீஷ் ஒரு அபார பீல்டு கோல் அடித்து இந்த அணியை 1-0 என வெற்றி பெறச்செய்தார். இந்த வெற்றி பெங்களூர் அணிக்கு 2வது வெற்றியாகும். 3வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் 20-0 என்ற கோல் கணக்கில் திரிபுராவை வென்றது. 2-வது ஆட்டத்தில் சத்தீஸ்கருடன் 3-3 என சமன் செய்தது. கடைசி லீக் ஆட்டத்தில் ஆந்திரா ஹாக்கி சங்க அணியுடன் நாளை மறுநாள் (12ந் தேதி) மோதுகிறது.

அதே டி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில  சத்தீஸ்கர் அணி 17க்கு 1 என்ற கணக்கில் திரிபுராவை வீழ்த்தி கோல்மழை வெற்றி கண்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP