அகில இந்திய அஞ்சல்துறை ஹாக்கி: கோப்பையை வென்றது கர்நாடகா..!

அஞ்சல் துறையின் 32வது அகில இந்திய ஹாக்கி போட்டிகளின் இறுதி சுற்றில் கர்நாடக அஞ்சல்துறை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. மத்தியப் பிரதேசம் 2வது இடத்தையும், தமிழ்நாடு 3வது இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
 | 

அகில இந்திய அஞ்சல்துறை ஹாக்கி: கோப்பையை வென்றது கர்நாடகா..!

அஞ்சல் துறையின் 32வது அகில இந்திய ஹாக்கி போட்டிகளின் இறுதி சுற்றில் கர்நாடக அஞ்சல்துறை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில் கடந்த ஒரு வார காலமாக அஞ்சல் துறையின் 32வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. இன்று நடைபெற்ற அதன் இறுதி போட்டியில் மத்திய பிரதேச அணியும் கர்நாடகா அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கர்நாடகா அணி 9-8 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மத்தியப் பிரதேசம் 2வது இடத்தையும், தமிழ்நாடு 3வது இடத்தையும் கைப்பற்றியுள்ளன. 

அகில இந்திய அஞ்சல்துறை ஹாக்கி: கோப்பையை வென்றது கர்நாடகா..!

இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷ்ரேஸ்தா, முன்னாள் இந்திய ஹாக்கி அணி தலைவர் ரியாஸ் நபி முகமது, தமிழ்நாடு சரக தலைமை அஞ்சல்துறை அதிகாரி சம்பத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகளையும் பதக்கங்களையும் வழங்கினர். தொடர்ந்து பேசிய தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷ்ரேஸ்தா, வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், மத்திய மாநில துறைகளில் நடக்கும் இது போன்ற விளையாட்டு போட்டிகளால் பணிசுமையை மறந்து வீரர்கள் புது உத்வேகம் பெறுவதாகவும், இது போன்ற போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுவதால் தேசிய அணியிலும் விளையாட வாய்ப்புகள் அமையும் எனவும் அவர் கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP