ஹாக்கி உலகக் கோப்பை: இந்தியா - கனடா இன்று பலப்பரீட்சை

உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடைபெறும் முக்கிய போட்டியில், இந்தியா - கனடா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறும்.
 | 

ஹாக்கி உலகக் கோப்பை: இந்தியா - கனடா இன்று பலப்பரீட்சை

உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடைபெறும் முக்கிய போட்டியில், இந்தியா - கனடா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறும்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில், இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. குரூப் சி-யில் இந்தியா, பெல்ஜியம், கனடா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள், ஒரு வெற்றி, ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் உள்ளன. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 5-0 என்ற கணக்கில் இந்தியா அபாரமாக வீழ்த்தி இருந்தால், அதிக கோல்கள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளது. இன்று நடைபெறவுள்ள போட்டியில் கனடாவை இந்திய அணி வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேபோல, கனடா அணியும், இந்த போட்டியில் தோல்வியடைந்தால் உலக கோப்பையை விட்டு வெளியேற அதிக வாய்ப்புள்ளது

இந்திய தரப்பில் மந்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங், சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். முக்கியமாக சிம்ரன்ஜீத் சிங் இதுவரை 3 கோல்கள் அடித்துள்ளார். பலம் வாய்ந்த இந்திய அட்டாக், இந்த போட்டியில் கனடாவை சிதைக்க முயற்சி செய்யும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா - கனடா இடையே நடைபெற்றுள்ள 5 போட்டிகளில் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு டிரா மற்றும் ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது. கனடா அணி முழுக்க முழுக்க, அதன் டிபென்ஸை நம்பியே உள்ளது. அதனால், இந்திய வீரர்கள் எளிதில் பாஸ் செய்ய முடியாத அளவு கனடா தடுப்பரண் முயற்சி எடுக்கும்.  

பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பெல்ஜியம் அணி கோல் அடித்து போட்டியை சமன் செய்தது. சமீப காலத்தில், இந்திய டிபென்ஸ், கடைசி நேரத்தில் கோல்களை தவற விட்டு வருகிறது. அதனால், சிறப்பாக டிபன்ஸ் செய்து, வழக்கம்போல் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து அட்டாக் செய்தால், இந்த போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP