ஹாக்கி சாம்பியன்ஸ் ட்ராபி: இந்தியா vs பாகிஸ்தான் - இறுதிப்போட்டி முன்னோட்டம்

2018ம் ஆண்டிற்கான ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான்-இந்தியா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வெற்றி பெற வாய்ப்புகள் இருந்தாலும், ரசிகர்களுக்கு திக்... திக்... தான்.
 | 

ஹாக்கி சாம்பியன்ஸ் ட்ராபி: இந்தியா vs பாகிஸ்தான் - இறுதிப்போட்டி முன்னோட்டம்

2018ம் ஆண்டிற்கான ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தானுடன் இந்தியா இன்று மோதுகிறது. இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தெற்காசியப் போட்டியிலும், ஆசியப் போட்டியிலும் இந்த இரு அணிகளும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியமான சுமார் 20 போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றையொன்று சந்தித்துள்ளன. இதில் 13 போட்டிகளில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றுள்ளது. 1982, 1985 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளிலும் இறுதிப் போட்டிகளில் இந்தியாவுடன் மோதி, பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

ஹாக்கி சாம்பியன்ஸ் ட்ராபி: இந்தியா vs பாகிஸ்தான் - இறுதிப்போட்டி முன்னோட்டம்

இந்திய ஹாக்கி அணியை பற்றிக் கூறும் போது, 1980 ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு, அடுத்த 30 ஆண்டுகளுக்கு குழுவின் செயல்திறன் குறைந்து காணப்பட்டது, உலகக் கோப்பையில் ஒரு பதக்கம் வெல்லத் தவறியது. பின்னர் சுதாரித்துக் கொண்ட இந்திய ஹாக்கி அணி 2016 ஆம் ஆண்டில், சாம்பியன் டிராபியில் முதல் வெள்ளி பதக்கத்தைக் கைப்பற்றியது. 36 ஆண்டுகளில் முதன்முறையாக ஒலிம்பிக்கின் நாக் அவுட் கட்டத்தையும் அடைந்தது.

ஹாக்கி சாம்பியன்ஸ் ட்ராபி: இந்தியா vs பாகிஸ்தான் - இறுதிப்போட்டி முன்னோட்டம்

தற்போது ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில், இதுவரை இந்திய அணி கடும் ஆதிக்கம் செலுத்தி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கிறது.  

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்ற இன்று பாகிஸ்தானும் இந்தியாவும் மோதுவது மிகவும் கடுமையான போட்டி என்றே சொல்லலாம்.  இந்தப்போட்டியில இந்தியா வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையிலும், இந்திய ஹாக்கி ரசிகர்களுக்கு கொஞ்சம் ”திக், திக்” என்றே சொல்லலாம்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP