ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி: ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

ஒமானில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி ஹாக்கி தொடரின் அரையிறுதியில், ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றது நடப்பு சாம்பியன் இந்தியா. இறுதி போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் மோதுகின்றன.
 | 

ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி: ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

ஒமானில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி ஹாக்கி தொடரின் அரையிறுதி போட்டியில், ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது  இந்தியா.

போட்டி துவங்கியது முதல், இந்தியா ஜப்பானுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தது. முதல் கால் மணி நேரத்தில் பல வாய்ப்புகளை இந்தியா உருவாக்கியது. ஆனால், கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது கால் மணி நேரம் துவங்கி சில நிமிடங்களிலேயே, இந்திய அணியின் குஜ்ரந்த் சிங் சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே, ஜப்பானின் வக்குரி கோல் அடுத்து போட்டியை சமன் செய்தார்.

43வது நிமிடத்தில், இந்திய வீரர் வருண் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். கடைசி கால் மணி நேர ஆட்டத்தில், தொடர்ந்து இந்திய வீரர்கள் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கி வந்தனர். 55வது நிமிடத்தில் இந்திய வீரர் டிப்ரீத் கோல் அடித்து 3-1 என்ற கணக்கில் முன்னிலை கொடுத்தார். கடைசி நிமிடங்களில், ஜப்பான் ஒரு ஆறுதல் கோல் அடித்தது. 3-2 என்ற கணக்கில் சூப்பர் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா.

மற்றொரு அரையிறுதியில் மலேசியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதைத் தொடர்ந்து, இன்று (அக்.28) நடைபெறும் இறுதி போட்டியில், இந்தியா பாகிஸ்தானுடன் மோதுகிறது.

newstm.inம்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP