நான்கு நாடுகள் ஹாக்கி: இறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேற்றம்

நான்கு நாடுகள் ஹாக்கி: இறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேற்றம்
 | 

நான்கு நாடுகள் ஹாக்கி: இறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேற்றம்


நான்கு நாடுகள் பங்கேற்றிருக்கும் ஹாக்கி போட்டித் தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்தியா அணி தரப்பில், ஹர்மான்ப்ரீத் சிங், தில்ப்ரீத் சிங், மந்தீப் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். நியூசிலாந்தின் கேன் ரஸ்ஸல் ஒரு கோல் போட்டார். நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா- பெல்ஜியம் அணியுடன் மோத இருக்கிறது. ஒலிம்பிக் வெள்ளி பதக்கம் வென்ற அணியான பெல்ஜியம், ஜப்பானை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இந்திய அணி, துவக்க போட்டியில் ஜப்பானை வீழ்த்தியும், 2-வது போட்டியில் பெல்ஜியம் அணியிடம் தோற்றும் இருந்தது. 3-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை இந்தியா வென்றுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP