விளையாட்டை கவுரவிக்க தவறினால் விளையாட்டு வளராது: அமைச்சர் கிரண் ரிஜிஜூ

விளையாட்டை கவுரவிக்க தவறினால் விளையாட்டு வளராது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
 | 

விளையாட்டை கவுரவிக்க தவறினால் விளையாட்டு வளராது: அமைச்சர் கிரண் ரிஜிஜூ

விளையாட்டை கவுரவிக்க தவறினால் விளையாட்டு வளராது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனை வளாகத்தில் சர்வதேச தரத்தில் ரூ.9 கோடியில் அமைக்கப்பட்ட புதிய ஹாக்கி மைதானத்தை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று திறந்து வைத்தார்.

இதன்பின் பேசிய மத்திய அமைச்சர், ‘விளையாட்டை கவுரவிக்க தவறும் சமூகத்தில் விளையாட்டு வளராது. சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திய ஹாக்கி அணி தற்போது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடியாத நிலையில் உள்ளது. ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பல பதக்கங்களை வெல்ல வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். 2024 ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியை இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்ல வைப்பதே முக்கிய திட்டமாகும்’ என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ பேசியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP