இதோ நம்ம வழிக்கு வந்துட்டான்ல வெள்ளைக்காரன்... லண்டனிலும் பேல் பூரி விற்பனை ஜோர் !

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அந்த ஆட்டத்தில் ஒருபுறம் அனல் பறந்து கொண்டிருக்க, இங்கிலீஷ்காரர் ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்த, நம்ம ஊர் அயிட்டமான "பேல் பூரி" விற்பனை மறுபுறம் சூடுபிடித்து கொண்டிருந்தது.
 | 

இதோ நம்ம வழிக்கு வந்துட்டான்ல வெள்ளைக்காரன்... லண்டனிலும் பேல் பூரி விற்பனை ஜோர் !

லண்டன் - லாட்ஸ் மைதானம், நாட்டிங்ஹாம் -டிரென்ட் பிரிட்ஸ் மைதானம், கார்டிப் -சோஃபியா கார்டன் என, பச்சை பசேல் என்று கண்ணுக்கு விருந்தளிக்கும் இங்கிலாந்து மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிப்பது ஓர் அலாதி அனுபவம் என்றால், அங்கு கேலரிகளில் விற்கப்படும் விதவிதமான திண்பண்டங்களை சுவைப்பது  ரசிகர்களுக்கு மற்றுமொரு சுவையான அனுபவம்.

பீட்சா, பர்க்கர், சிப்ஸ், சான்வெட்ச் என சைவ வகைகளும், மீன் வறுவல், கிரில் சிக்கன் என அசைவ நொறுக்கி தீனிகளும், விதவிதமான குளிர்பானங்கள், ஏன் பீர் வகைகளும்கூட இங்கிலாந்து கிரிக்கெட் மைதானங்களில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க எப்போதும் தயாராக இருக்கும்.

இத்தனை "ஸ்நாக்ஸ்" அயிட்டங்களுக்கு மத்தியிலும், உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தும் விதத்தில், லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் ஒரு சுவையான நொறுக்கு தீனியின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அந்த ஆட்டத்தில் ஒருபுறம் அனல் பறந்து கொண்டிருக்க, இங்கிலீஷ்காரர் ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்த, நம்ம ஊர் அயிட்டமான "பேல் பூரி" விற்பனை மறுபுறம் சூடுபிடித்து கொண்டிருந்தது. 

விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே மொத்த பேல் பூரியும் காலியாகிவிட்டதென்றால் பாருங்களேன்! உண்ணும் விஷயத்தில் வெள்ளக்காரர்களும் நம்ம வழிக்கு வந்துட்டதை இந்த விடியோவில் நீங்களே பாருங்க...!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP