ஹர்பஜன், பதானுக்கு பிறகு பும்ரா செய்த சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததன் மூலம், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.
 | 

ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், பந்துவீசிய பும்ரா, டேரன் பிராவோ, ஷமாரா புரூக்ஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். அத்துடன், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-ஆவது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார் பும்ரா.

முன்னதாக, 2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்க்கு எதிரான போட்டியில் ஹர்பஜன் சிங்கும், 2006-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இர்பான் பதானும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP