என்னாச்சு தல தோனிக்கு? ரசிகர்கள் கலக்கம்...

இந்திய அணியின் "மேட்ச் ஃபினிஸர்" என்ற பெயருக்கு சொந்தக்காரரான தோனிக்கு, நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இத்தொடரில் இதுவரை அவர் விளையாடியுள்ள 7 போட்டிகளில் சேர்த்து மொத்தமாகவே 223 ரன்களை தான் எடுத்துள்ளார்.
 | 

என்னாச்சு தல தோனிக்கு? ரசிகர்கள் கலக்கம்...

இந்திய அணியின் "மேட்ச் ஃபினிஸர்" என்ற பெயருக்கு சொந்தக்காரர் எம்.எஸ்.தோனி. நம்ம தல களத்துல இருக்கிறாரா? அப்போ இந்தியா ஜெயிச்சிடும் என ரசிகர்கள் தைரியமாக சொல்லும் அளவுக்கு, தனது பிரபலமான ஹெலிகாப்டர்  ஷாட்டின் மூலம் இந்தியாவை பலமுறை வெற்றிப் பெற செய்தவர். அதுவும் இந்தியா இரண்டாவதாக பேட்டிங் (சேசிங்) செய்யும் போட்டிகளில் தோனி, தனது அதிரடி ஆட்டத்தின்  மூலம் எதிரணியினரின் வயிற்றில் புளியை கரைப்பதில் வல்லவர் என்பதை கிரிக்கெட் உலகம் நன்கறியும். 

இத்தகைய சிறப்புகள் மிக்க தோனிக்கு, நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இத்தொடரில் இதுவரை அவர் விளையாடியுள்ள 7 போட்டிகளில் சேர்த்து மொத்தமாகவே 223 ரன்களை தான் எடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 52 பந்துகளில் வெறும் 28 ரன்களை மட்டுமே தோனியால் எடுக்க முடிந்தது. தமது ஆமைவேக ஆட்டத்தின் காரணமாக, தோனி கடும் விமர்சனங்களுக்கு ஆளானார்.

சரி... ஆட்டத்தின் நிலவரத்தை பொருத்து, பொறுமையாக விளையாட வேண்டிய சூழல். அதனால் அன்று அப்படி விளையாடினார் எனச் சொல்லலாம். ஆனால், இங்கிலாந்து உடனான மிக முக்கியமான ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

என்னாச்சு தல தோனிக்கு? ரசிகர்கள் கலக்கம்...

ஒருநாள் போட்டிகளிலும் சரி... ஐபிஎல் ஆட்டங்களிலும் சரி...இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் சிக்ஸரும், பவுண்டரியும் பறக்கவிட்டு. அணியை பலமுறை வெற்றிப் பாதைக்கு  இட்டுச் சென்ற தோனி களத்திலிருந்தும் அந்தப் போட்டியில் இந்தியா எப்படி தோற்றிருக்கலாம்?, தோனியின் அனுபவம் அன்று அணியின் வெற்றிக்கு கைகொடுக்காமல் போனது ஏன்? என்ற கேள்வி பரவலாக எழுந்தது.

அத்துடன் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் -ரோஹித் சர்மா ஜோடி, சிறப்பான துவக்கத்தை தந்ததால், 350 பிளஸ் ரன்களை எடுத்திருக்க வாய்ப்பிருந்தும், இந்தியாவால் 314 ரன்களையே எடுக்க முடிந்தது. அந்தப் போட்டியிலும் தோனி 35 ரன்கள் மட்டுமே அடித்து அவுட் -ஆனதும், அவரை விமர்சனத்துக்குள்ளாக்கியது.

தோனி இப்படி தொடர்ந்து கேள்விக்கணைகளுக்கு ஆளாகி வருவதால், என்னாச்சு தல தோனிக்கு? என அவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். தனது ரசிகர்களின் வருத்தத்தை போக்கும் விதத்திலும், தன் மீதான பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும், உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் தல தோனி, பேட்டிங்கில் பட்டையை கிளப்புவார் என நிச்சயம் நாம் எதிர்பார்க்கலாம்.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP