முதல் டெஸ்ட் போட்டி: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா...

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டு இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
 | 

முதல் டெஸ்ட் போட்டி: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா...

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டு இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹக் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து, களமிறங்கி விளையாடிய வங்கதேச அணியினர் இந்திய பந்துவீச்சாளர்களை தாக்குபிடிக்க முடியாமல் 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக முஷ்பிகுர் 43, மோமினுல் 37, லிட்டன் தாஸ் 21 ரன்கள் சேர்த்தனர்.  இந்திய அணி தரப்பில் ஷமி 3, உமேஷ், இஷாந்த், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதனைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் புஜாரா 43, அகர்வால் 37 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP