இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி

இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 | 

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி

இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் விளையாடுகிறது. முதல் டி.20 போட்டி அடிலெய்டு நகரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா வீரர்கள் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் அதிக ரன்களை குவித்தனர்.  20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, ஆஸ்திரேலியா வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே திணறியது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் டி.20 தொடரை கைப்பற்றியுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP