முதல் அரையிறுதிப் போட்டி: இந்தியா பந்துவீச்சு, குல்தீப்புக்கு பதில் இவர்?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், முதல் அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 | 

முதல் அரையிறுதிப் போட்டி: இந்தியா பந்துவீச்சு, குல்தீப்புக்கு பதில் இவர்?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், முதல் அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி  பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக சாஹல்   சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து அணியில் சவுதிக்கு பதிலாக பெர்குசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு அணி வீரர்கள் விவரம்:

இந்தியா: ராகுல், ரோகித் சர்மா, கோலி(கேப்டன்), பண்ட், தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, புவனேஸ்வர் குமார், சாஹல் , பும்ரா. 

நியூசிலாந்து: கப்தில், நிக்கோலஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெய்லர், லாதம்,  நீஷம், கிராண்ட்ஹோம், சான்ட்னர், பெர்குசன், ஹென்றி, போல்ட்.   

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP