1. Home
  2. விளையாட்டு

உலகக் கோப்பை ஸ்பெஷல்: மெஸ்ஸியின் டாப் 5 கலக்கல் கோல்

உலகக் கோப்பை ஸ்பெஷல்: மெஸ்ஸியின் டாப் 5 கலக்கல் கோல்

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நெருங்கிவிட்டன. உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள், போட்டிகளை கண்டுகளிக்கும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த உலகக் கோப்பையில், அதிக கவனித்தை ஈர்க்கும் கால்பந்து வீரர்கள் 3 பேர். அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரேசிலின் நெய்மார்.


நூற்றுக்கணக்கான கோல்களை அடித்து, தங்களது க்ளப் அணிக்காக பல கோப்பைகளை குவித்துள்ள இந்த மூவரும், உலகக் கோப்பையை இதுவரை வென்றதில்லை. அதுவும் முக்கியமாக, கால்பந்து சரித்திரத்திலேயே மிகசிறந்த வீரராக கருதப்படும் மெஸ்ஸிக்கும் அவருக்கு கடும் போட்டி கொடுக்கும் ரொனால்டோவுக்கும் இது கடைசி உலகக் கோப்பையாக கருதப்படுகிறது. 33 வயதான ரொனால்டோவும், 30 வயதான மெஸ்ஸியும் 4 வருடங்களுக்கு பிறகு தேசிய அணிக்காக விளையாடுவார்களா என்பது சந்தேகமே. எனவே இருவருக்குமுள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இந்த உலகக் கோப்பை ரொம்ப ஸ்பெஷல்.


இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா அணிக்காக விளையாடும் மெஸ்ஸி, ஏன் சரித்திரத்திலேயே சிறந்த வீரராக பலரால் கருதப்படுகிறார்? அவர் அடித்த டாப் 5 கோல்களை பார்த்தால் உங்களுக்கே தெரிந்துவிடும்...


நம்பர் 5:

அர்ஜென்டினா vs அமெரிக்கா: 2016ம் ஆண்டு நடைபெற்ற 100வது ஆண்டு கோபா அமெரிக்கா தொடரின் அரையிறுதி போட்டியில், அமெரிக்காவுடன் அர்ஜெடினா மோதியது. அப்போது மெஸ்ஸி அடித்த ப்ரீ கிக் கோல் எதிரணி வீரர்களை வாயடைக்க வைத்தது.


நம்பர் 4:

அர்ஜென்டினா vs ஈரான்: 2014 உலகக் கோப்பையில், ஈரானுடன் அர்ஜென்டினா மோதிய போட்டி கோல் எதுவும் இல்லாமல் டிரா ஆகா இருந்தது. 90 நிமிடங்கள் மிக சிறப்பாக விளையாடி மெஸ்ஸியை கோல் அடிக்க விடாமல் செய்தனர் ஈரான் வீரர்கள். ஆனால், போட்டி முடியும் தருவாயில் 91வது நிமிடத்தில், மொத்த ஈரான் அணியும் தன் முன்னே நிற்க, அவர்கள் அனைவரையும் தாண்டி பந்தை சுழற்றி கோல் அடித்தார்.


நம்பர் 3:

பார்சிலோனா vs கெடாஃபே: 2007ம் ஆண்டு, வெறும் 19 வயதான இளம் வீரர் லியோனல் மெஸ்ஸி, கெடாஃபே அணிக்கு எதிராக அடித்த கோல் சரித்திரத்தில் பதிவானது. பந்தை மைதானத்தின் பாதியில் வாங்கிய மெஸ்ஸி, எதிரணி வீரர்கள் 6 பேரை தாண்டி பந்தை எடுத்துச் சென்று, ஒரு சூப்பர் கோல் அடித்தார். பார்சிலோனாவின் கேம்ப் நூ மைதானத்த்தில் இருந்த சுமார் 1 லட்சம் பேர் எழுந்து நின்று கைதட்டினர். 1986ம் ஆண்டு உலகக் கோப்பையில் மாரடோனா அடித்த கோலை போலவே இது அமைந்ததால், அன்று முதல் புதிய மாரடோனா என அழைக்கப்பட்டார்.


நம்பர் 2:

பார்சிலோனா vs பாயர்ன் முனிச்: 2015ம் ஆண்டு க்ளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் கோப்பையின் அரையிறுதி போட்டியில், பலம் வாய்ந்த பாயர்ன் முனிச்சுடன் பார்சிலோனா மோதியது. 77வது நிமிடத்தில் சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்த மெஸ்ஸி, அடுத்த இரு நிமிடங்களில், முனிச் அணியின் நட்சத்திர வீரர்கள் 3 பேரை தாண்டி சென்று கோல் அடித்தார். உலகக் கோப்பை வென்ற வீரர்களை சிறு பிள்ளைகளை போல குழப்பி மண்ணை கவ்வ வைத்தார் மெஸ்ஸி.


நம்பர் 1:

பார்சிலோனா vs அத்லெடிக் பில்பாவோ: 2015 ஸ்பானிஷ் கோப்பை இறுதி போட்டியில், மெஸ்ஸி அடித்த கோல் பற்றி நம்மால் சொல்ல முடியாது. அதை பார்த்தால் தான் தெரியும். இந்த கோலை ஆராய்ச்சி செய்த பலர் மறுபடியும் இதுபோன்ற ஒரு கோலை மெஸ்ஸியால் கூட அடிக்க முடியுமா என்பது சந்தேகமே என கூறினார்கள். அவ்வளவு ஸ்பெஷல் கோல் அது.

newstm.in

Trending News

Latest News

You May Like