உலகக் கோப்பை: சவுதி அரேபியாவை புரட்டி எடுத்த ரஷ்யா 5-0!

கோலாகலமாக இன்று துவங்கிய உலகக் கோப்பையின் முதல் போட்டியில், சவுதி அரேபியாவை 5-0 என துவம்சம் செய்தது ரஷ்யா.
 | 

உலகக் கோப்பை: சவுதி அரேபியாவை புரட்டி எடுத்த ரஷ்யா 5-0!

கோலாகலமாக இன்று துவங்கிய உலகக் கோப்பையின் முதல் போட்டியில், சவுதி அரேபியாவை 5-0 என துவம்சம் செய்தது ரஷ்யா. 

மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் துவங்கிய உலகக் கோப்பையின் முதல் போட்டி, ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. முதல் போட்டி என்பதால், போட்டியை காண ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சவுதி அரேபிய இளவரசர் சல்மான் ஆகியோர் வந்திருந்தனர். ஆட்டம் துவங்கிய 12வது நிமிடமே ரஷ்யா கோல் அடித்து முன்னிலை பெற்றது. கார்னர் கிக் வாய்ப்பை தடுக்க முடியாமல் சவுதி வீரர்கள் திணற, யூரி கசின்ஸ்கி தலையால் முட்டி, 2018 உலகக் கோப்பையின் முதல் கோலை அடித்தார். 

24வது நிமிடத்தின் போது, ஜாகோவ் காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு பதில் நட்சத்திர வீரர் டெனிஸ் செரிஷேவ் களமிறக்கப்பட்டார். முதல் பாதி முடியும் நேரத்தில், ரஷ்யா சூப்பராக கவுன்டர் அட்டாக் செய்து பந்தை எடுத்துச் செல்ல, மாற்று வீரராக களமிறங்கிய செரிஷேவ் கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார். 

இரண்டாவது பாதியிலும் தனது மோசமான ஃபார்மை சவுதி தொடர்ந்தது. 70வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய ஆர்டெம் ஸியூபா, அடுத்த நிமிடமே தலையால் முட்டி கோல் அடித்தார். போட்டி முடியும் 91வது நிமித்தில், செரிஷேவ் மீண்டும் ஒரு சூப்பர் கோல் அடித்தார். அதன்பின் ஒரு ப்ரீகிக் வாய்ப்பு கிடைக்க, 22 வயதேயான இளம் வீரர் அலெக்ஸாண்டர் கோலோவின், பந்தை சுழற்றி அடித்து கோலுக்குள் தள்ளினார். போட்டி 5-0 என முடிந்தது. 

கடந்த உலகக் கோப்பை முழுக்க ரஷ்யா 2 கோல்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில், இந்த முறை முதல் போட்டியிலேயே 5 கோல்கள் அடித்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP